
முழுதாய் நீ..வேண்டும்
எனக்காக...நீ..வேண்டும்
காலமதை..இனிமையாக்கி
காலமெல்லாம் நீ..வேண்டும்
காலத்தை நீ..வென்று
எனக்குமட்டும்..நீ...வேண்டும்
சூழல்கள் தடுத்தாலும்.
சுகமாக நீ..வேண்டும்
என் கண்களை பார்க்கும் போதாவது
கண்ணீரை தடுக்க நீ...வேண்டும்.
என் கண்களிலும்.. கண்ணீரை பார்க்காத..
உன் கண்கள் வேண்டும்.
எனை அக்கறையாய்..அனைத்து
சிரிப்பை மட்டும். கொடுத்து
உறங்க வைக்க.
உன் மடி வேண்டும்.
நீ...இருக்கும் வரை நான்
இருக்க வேண்டும்.
நீ..மட்டும் வேண்டும்
முழுதாய் நீ..வேண்டும்
ராகினி.ஜேர்மன்