
எனக்கும் தெரியும்...
உனக்குத் தெரியாதா...?
நான் உன்னை நேசிப்பதும்.....
என் வார்த்தைகளால்.. காதலிக்கின்றேன்
என்று சொல்ல விரும்பவில்லை
ஏன் தெரியுமா..?
என் கண்ணும் என் விழியும் சொல்லாததையா..?
என் உதடு சொல்லிவிடப் போகிறது உனக்கு?
என்னுடயது என்று நீ.. நினைத்தால்.
அது உன் தவறு
காதல் தொடக்கம் கடமைவரை
அது நம்முடையது என்று நினைத்து விடு.
இருவரும் காதலித்தபின்
நான் வேறுநீ..வேறா....?
இப்போ..என் தேவைகள்
எது தெரியுமா....?
தினமும் என் அருகில்
நீ..வேண்டும்
ஒவ்வொரு வினாடியும்
என்னோடு பேச வேண்டும்
அது...புலம்பலாக இருந்தாலும்
என் காதில் உன் குரல் வேண்டும்.
உன் குரலைக்கேட்டுக் கொண்டுதான்..
நான் உறங்குவேன் என்பதும் உனக்கு தெரிந்தும்
.தெரியாதது போல்...நீ..போடும் வேஷம்எனக்கும் தெரியும்.
நீ...என்னை நேசிக்கின்றாய்
ஆனால்....உன் மௌனம்தான் எது எனத் தெரியாமல்
. தினம்...தினம்..எனை வேதனையாக்குகிறது.
- ராகினி, germany
3 comments:
உனக்கு தெரிந்தும்
தெரியாதது போல்...நீ..போடும் வேஷம்எனக்கும் தெரியும்.
நீ...என்னை நேசிக்கின்றாய்
ஆனால்....உன் மௌனம்தான் எது எனத் தெரியாமல்
. தினம்...தினம்..எனை வேதனையாக்குகிறது.
மிக மிக அருமை அனுபவம் தெரிகிறது ஏக்கமும் தெரிகிறது
nanri ungga vaalthukku
என் கண்ணும் என் விழியும் சொல்லாததையா..?
என் உதடு சொல்லிவிடப் போகிறது உனக்கு?
- ஆஹா.... அனுபவம் பேசுகிறதா?
Post a Comment