
தீர்வுதான் என்ன...?
கானல் கொண்ட வார்த்தைகள் அல்ல..
உன் காதலுக்குஎன் கண்ணீர் கவிகள்......
மெல்லின வரிகொண்டு மெல்லெனப்பேசி
மனதை திருடிவிட்டு - நீமறைந்தது ஏனோ...?
வசந்தம் தேடிஉன்னை சரணடைந்தேன்வருவேன் என்று கூறிச்சென்றவனே.
எப்போ நீ வருகை தந்து என்னை வசந்தமாக்குவாய்...?
காலங்களோ கணக்கில் நகர்கின்றது.
நீயோகாலங்களை பார்வையிட மறுத்து விட்டாய்
பருவத்தில் புகுந்து கொண்ட காதல் அல்ல
காலத்தின் கையில் அகப்பட்ட காதலும் அல்ல
அழகுக்கு இடம் கொடுத்த காதல் அல்ல
காலம் முழுதும் அழியாத காதல் இது.
பசுமை நிறைந்த காதல் நினைவுகளை
உன் அழகில் பதிக்கவில்லை
விலை மதிப்பற்ற இரு உயிரோடு
கலந்துஉருவானது...
இந்தப் புனிதமான காதல்.
புனிதமான காதலுக்கு நீ கொடுத்த வரம்
தலையணையிலும், படுக்கையிலும்
ஒவ்வொரு இரவும் கண்ணீரால்
நனைந்து கொண்டது.
உன் புகைப் படத்தைப் பார்க்கும் போது
காதல் உயர்ந்தது என பெருமை கொள்வேன்
இருந்தும் காலம் ஓடுகையில்
என் மனம் ஏக்கம் கொள்ளும்
நம் வாழ்க்கை இருளாகி விடுமோ..? என்று
உனக்காக கல் வைத்த இடமெல்லாம்
கை எடுத்து கும்பிடுவேன்
நம் காதல் கனவுகளை அழித்திடாதே
என்னவனை காணஉன் தீர்வுதான் என்ன என்று...?
- ராகினி, germany
1 comment:
அன்புள்ள ராகினி அவர்களுக்கு...
தங்கள் கவிதைகள்...தங்கத் தமிழில்...சிங்கார நடையில்...திங்கள் ஒளி வீசுகின்றன.
காதல், அன்பு, பாசம், மானுட நேயம், பக்தி,சமூக விழிப்புனர்வு....என அதனை விஷயங்களையும்...
சத்தியப் பார்வையுடனும்...
சின்ன வரிகளால் சிகரம் தொடும் எளிமையுடனும் எழுதிய தங்கள் முத்திரைப் படைப்பாற்றல்
என்னை விழி உயர்த்தி வியக்க வைக்கிறது.
வாழ்த்தி வணங்க வைக்கிறது.
அவசர வாழ்வின் இயந்திர சிறைக்குள் சிக்கியிருக்கும் மனிதனை....
விடுவிக்கக் கூடிய 'தன்னம்பிக்க தீபம்' ஏந்தும் கவிதைகளையும் இன்னும் அதிகமாக தாங்கள் படைக்க வேன்டும் என்பது என் பணிவான வேண்டுகோள்...
அன்புடன்
யாழ் சுதாகர்
சென்னை - 87
Post a Comment