
வாழ்வில் இன்பம் கொள்
வாழ்க்கை ஓடும்போது
வரும் அனுபவமோ....ஏராளம்
அதில் வீழ்வதும் புறழுவதும் உயர்வதும்
அவன் அவனின் திறமையிலே...
உள்ளது என்பதை நீ...உணர்வாய்.
வாழ்வில்....நோக்கம் ஒன்றாக
வேண்டும்
ஆக்கம் அவசியம்
வேண்டும்
நம்பிக்கை சுடர் கொள்ள
வேண்டும்
நடந்து முடிந்ததை விட்டு விட்டு
நடப்பவை எதுவென சிந்திக்க
வேண்டும்
ஒவ்வொரு பொழுதுகளையும்
இனிமையாக்க வேண்டும்
துன்பம் வந்தாலும் துணிவுடன்
போராட வேண்டும்.
முதல்..நீ.... உன்னை நேசிக்க...
வேண்டும்
பின்....உன் குடும்பத்தை நேசிக்க....
வேண்டும்.
அதன் பின் உலகை நேசிக்க...
வேண்டும்.
வாழ்கை கோடை காலமாய்
வறண்டு விட்டதே..என
மனதை நொந்து நொந்து
சாகடிப்பதை விட
இருக்கும் வாழ்கையை
வசந்தமாக்க வேண்டும்
நம்பிக்கையை இழக்காது வாழ்வை
நகர்த்திச் செல்ல வேண்டும்
இருப்பதை இனிமையாக்கி..
இன்பமாக வாழும் போது...
அங்கே இன்பம் காண்பாய்.
- ராகினி, germany
1 comment:
இருப்பதை இனிமையாக்கி..
இன்பமாக வாழும் போது...
அங்கே இன்பம் காண்பாய்.
மிகவும் அருமையான கவி வரிகள்
எனது வாழ்த்துக்கள்
அன்புடன் இனியவள்
Post a Comment