
இனியவன்
இத்தனை நாள் உனக்காக காத்திருந்து.
உனை பார்க்க என்று ஓடிவந்தேன்
நீ...அதற்க்குள் தண்ணீரில் மூழ்கி விட்டாயே..
இதற்காகத்தானா...இத்தனை நாள் காத்திருந்தேன்
அன்பே..
என் கண்ணில் கண்ணீரை காண விரும்பமாட்டாய்.
முத்து முத்தாய் சிரிப்பை மட்டும்
இதுவரை எனக்கு அள்ளித் தந்தாய்..
உன்னை கண்டதனால்தானே
என் அழுகைக்குமுற்றுப் புள்ளி வைத்தேன்.
நீயோஇப்போ என்னை கண்ணீர்க் கடலில்
மூழ்க விட்டாயே....
எனக்குபரிசுத்தமான காதலை அள்ளித் தந்து விட்டு
நீ மட்டும் அமைதியாய் உறங்கலாமா....?
எங்கு சென்றாலும் எந்த வழியும் தெரியவில்லை.
விம்மி விம்மி வெதும்பினாலும்
மனம்விட்டு கதற முடியவில்லை.
.உன் உயிரை சூரையாடிய காலதேவனுக்குதெரியவில்லை
என் தவிப்பு...
உன்னைப் போல் எனை யாரும்நேசிக்கவில்லை இப்பூமியில்.
அதனால்..காதல் வீணையில்
ராகாமாக வாழ்ந்த என் இனியவனுக்கு
பூமியில்இடம் இல்லை என்ற போது
நான் மட்டும் இங்கிருந்து சுவாசிப்பதை விட
நானும் உன்னுடன் இக்கடலில் வந்து விட்டேன் என்றால்
அன்பே...என் கண்ணீர்த் துளிகள்
உன் உயிர் பிரிந்த கடலில் சங்கமித்து வானம் சென்று
மழையாய் பொழியட்டும்
நம் காதல் கல்லறையில்...
அப்போதாவது.. மகிழ்வடைவோம்
நீரோடு கலந்து விட்டது நம் உயிர் என்று....
- ராகினி, germany
No comments:
Post a Comment