வேண்டும்
------------
ஒவ்வொரு வாழ்வின் எதிர் நீச்சல் போடும்.
மனிடப்பிறவியில்.
போறாட்டத்தின் காலகட்டத்தில்
வேர்களை ஊண்டிய உறவுகள் எல்லாம்
மறைந்து மாயமாய்போனதுதான் இந்நப் புலம்பெயர்வு
புதிய நிலாவாய் இந்த வானத்தில் பிறந்திட
வேண்டும். கருணைகொண்ட இதயத்தோடு
சிசுக்கள் பிறந்திடவேண்டும்.
இனிய கணவுகள் மலர்ந்திட வேண்டும்.
அதில் உல்லாசமாய் உறவுகள் இணைந்திட வேண்டும்.
நினைப்பது எல்லாம் நல்லதாய் நினைக்க வேண்டும்.
ரத்தம் சிந்தாத பூமி பிறந்திட வேண்டும்.
கண்ணீர்சிந்தாத பெண்கள் வேண்டும்.
தயை பரிதவிக்க விடாத பிள்ளைகள் வேண்டும்.
கலைந்திடாத கலாச்சாரம் வேண்டும்.
முதியோரை மதித்திட வேண்டும்
நட்பின் ஆழம் வேண்டும்
கசக்காத காதல் வேண்டும்.
Monday, April 20, 2009
Monday, October 03, 2005
முழுதாய் நீ..வேண்டும்

முழுதாய் நீ..வேண்டும்
எனக்காக...நீ..வேண்டும்
காலமதை..இனிமையாக்கி
காலமெல்லாம் நீ..வேண்டும்
காலத்தை நீ..வென்று
எனக்குமட்டும்..நீ...வேண்டும்
சூழல்கள் தடுத்தாலும்.
சுகமாக நீ..வேண்டும்
என் கண்களை பார்க்கும் போதாவது
கண்ணீரை தடுக்க நீ...வேண்டும்.
என் கண்களிலும்.. கண்ணீரை பார்க்காத..
உன் கண்கள் வேண்டும்.
எனை அக்கறையாய்..அனைத்து
சிரிப்பை மட்டும். கொடுத்து
உறங்க வைக்க.
உன் மடி வேண்டும்.
நீ...இருக்கும் வரை நான்
இருக்க வேண்டும்.
நீ..மட்டும் வேண்டும்
முழுதாய் நீ..வேண்டும்
ராகினி.ஜேர்மன்
Sunday, September 25, 2005
பிரிவு.

பிரிவு.
நம் உடல்தான் பிரிந்தது
நம் காதல் அல்ல
நம் உதடுகள்தான்..
முத்தமிடவில்லை.
மனதால் நிமிடத்துக்கு.
ஆயிரம்முத்தமிடுகின்றோம்.
மனிதன் பிரிந்திட்டபோது
நம் காதலுக்கு.
என்னும்சக்தி அதிகமானது
கதைக்காத..போதும்
என் னோடு நீ..யும்
உன்னோடு நானும்
வாழ்கின்றோம்.
காலம் ஒரு நாள்
விடை தரும் என....
உனக்காக காத்திருப்பேன்
அதுவரைநீ.. காத்திருப்பாயா...?
செல்லமே..
காத்திருந்தால் உன் காதலி..
உயிர் வாழ்வாள்
இல்லைகாலதேவன் கையில்
அகப்பட்டுவிடுவாள்
அப்போதும்
நீ..என் செல்லமே..
உன் கவிதையில் நான்

உன் கவிதையில் நான்
உன்னை அறிந்தபின்
என் புன்னகை மலர்ந்தது.
உன்னிடம் வந்தபின்
என் முகம் மலர்ந்தது
உன் கவிதை முழுதும்
நான்.வாழ்கின்றேன்
நீ..தரும் இசையில்
உன்னோடு..வாழ்கின்றேன்
உன் இதயத்தில் என் பெயர்
மட்டும் பதிந்ததால்
நீ...சொல்லும் கவிதையில்
என் பெயரை மட்டும்
உற்சரித்தவிடு
அப்பேதுதான் என் இதயத்துக்கு
நீ..யாவது வலி கொடுக்காமல் இருப்பாய்.
Thursday, September 08, 2005
தீர்வுதான் என்ன...?

தீர்வுதான் என்ன...?
கானல் கொண்ட வார்த்தைகள் அல்ல..
உன் காதலுக்குஎன் கண்ணீர் கவிகள்......
மெல்லின வரிகொண்டு மெல்லெனப்பேசி
மனதை திருடிவிட்டு - நீமறைந்தது ஏனோ...?
வசந்தம் தேடிஉன்னை சரணடைந்தேன்வருவேன் என்று கூறிச்சென்றவனே.
எப்போ நீ வருகை தந்து என்னை வசந்தமாக்குவாய்...?
காலங்களோ கணக்கில் நகர்கின்றது.
நீயோகாலங்களை பார்வையிட மறுத்து விட்டாய்
பருவத்தில் புகுந்து கொண்ட காதல் அல்ல
காலத்தின் கையில் அகப்பட்ட காதலும் அல்ல
அழகுக்கு இடம் கொடுத்த காதல் அல்ல
காலம் முழுதும் அழியாத காதல் இது.
பசுமை நிறைந்த காதல் நினைவுகளை
உன் அழகில் பதிக்கவில்லை
விலை மதிப்பற்ற இரு உயிரோடு
கலந்துஉருவானது...
இந்தப் புனிதமான காதல்.
புனிதமான காதலுக்கு நீ கொடுத்த வரம்
தலையணையிலும், படுக்கையிலும்
ஒவ்வொரு இரவும் கண்ணீரால்
நனைந்து கொண்டது.
உன் புகைப் படத்தைப் பார்க்கும் போது
காதல் உயர்ந்தது என பெருமை கொள்வேன்
இருந்தும் காலம் ஓடுகையில்
என் மனம் ஏக்கம் கொள்ளும்
நம் வாழ்க்கை இருளாகி விடுமோ..? என்று
உனக்காக கல் வைத்த இடமெல்லாம்
கை எடுத்து கும்பிடுவேன்
நம் காதல் கனவுகளை அழித்திடாதே
என்னவனை காணஉன் தீர்வுதான் என்ன என்று...?
- ராகினி, germany
இனியவன்

இனியவன்
இத்தனை நாள் உனக்காக காத்திருந்து.
உனை பார்க்க என்று ஓடிவந்தேன்
நீ...அதற்க்குள் தண்ணீரில் மூழ்கி விட்டாயே..
இதற்காகத்தானா...இத்தனை நாள் காத்திருந்தேன்
அன்பே..
என் கண்ணில் கண்ணீரை காண விரும்பமாட்டாய்.
முத்து முத்தாய் சிரிப்பை மட்டும்
இதுவரை எனக்கு அள்ளித் தந்தாய்..
உன்னை கண்டதனால்தானே
என் அழுகைக்குமுற்றுப் புள்ளி வைத்தேன்.
நீயோஇப்போ என்னை கண்ணீர்க் கடலில்
மூழ்க விட்டாயே....
எனக்குபரிசுத்தமான காதலை அள்ளித் தந்து விட்டு
நீ மட்டும் அமைதியாய் உறங்கலாமா....?
எங்கு சென்றாலும் எந்த வழியும் தெரியவில்லை.
விம்மி விம்மி வெதும்பினாலும்
மனம்விட்டு கதற முடியவில்லை.
.உன் உயிரை சூரையாடிய காலதேவனுக்குதெரியவில்லை
என் தவிப்பு...
உன்னைப் போல் எனை யாரும்நேசிக்கவில்லை இப்பூமியில்.
அதனால்..காதல் வீணையில்
ராகாமாக வாழ்ந்த என் இனியவனுக்கு
பூமியில்இடம் இல்லை என்ற போது
நான் மட்டும் இங்கிருந்து சுவாசிப்பதை விட
நானும் உன்னுடன் இக்கடலில் வந்து விட்டேன் என்றால்
அன்பே...என் கண்ணீர்த் துளிகள்
உன் உயிர் பிரிந்த கடலில் சங்கமித்து வானம் சென்று
மழையாய் பொழியட்டும்
நம் காதல் கல்லறையில்...
அப்போதாவது.. மகிழ்வடைவோம்
நீரோடு கலந்து விட்டது நம் உயிர் என்று....
- ராகினி, germany
நான் வாழ்வது என் செல்லம் உனக்காக..

சொல்வாயா...என் செல்லமே...
துயில் கலைந்திட்ட கண்கள்
இமைக்க மறந்த போது...
காதல் வலியால் கசங்கியதுஎன் இதயம்
உன் இளமை தீண்டியதால்
சிக்கித் தவிக்கின்றேன்செல்லமே..
அன்றுநெஞ்சில் அன்பைத் தெளித்து
காந்தக் கண்ணில் கருணைகாட்டி
இன்பத்தில் மிதக்க வைத்த என்செல்லமே..
இன்று....உன் உதடுகள் பேச மறுக்கின்றதே.
ஒரு மொழிதன்னும் கூற மாட்டாயா?என..
.என் செவிகள் காத்திருக்கின்றது
ஒரு வார்த்தை பேசிடு என் செல்லமே...
உன்னை மட்டும் நேசித்தேன் நேசித்தேன்
என்று பல முறை சொன்னாய்
உன் நேசம் உண்மைதனில்...
உன் சுவாசத்தை என்னருகில் கொண்டு வா...
காதலித்தது உண்மைதனில்
உன் உணர்வுகளை உணவாகக் கொண்டு வா.
.ம்......என்னும் ஏன்.....உனக்கு
மௌனம்...
போதும் என் செல்லமே.
.உன் கோபம் நம் காதல் அத்திவாரமாக
அமையட்டும்
உன் மௌனம் எனக்கு தைரியம்
கொடுக்கட்டும்
செல்லமே..என் கண்கள் உனை பார்க்க
என் செவிகள் உன் மொழி கேட்க
என் உதடு உனை வாழ்த்த
என் இதயம் உன் நினைவுகளைச் சுமக்க
என் உணர்வுகள் உனைஅள்ளி அணைக்க
நான் வாழ்வது என் செல்லம் உனக்காக..
புரிந்து கொள்வாயா...?
இல்லைபிரிந்து செல்வாயா...?
பதில்தான் சொல்வாயா...?
- ராகினி, germany
Wednesday, September 07, 2005
என்உயிர்வரை தொடர்வது நீ...

என்உயிர்வரை தொடர்வது நீ...
தொலைவில் நீ....இருந்தாலும்
என்றும் என் அருகில் நீ..
.நினைவுகளால்உன்னை மட்டும்
என் உயிர் சுமப்பதால் என்றும் என்னுள் நீ....
உன்னை மட்டும் யாசித்ததால் என்னுள் என்றும் நீ...யே..
என்ன என்று புரியவில்லை
ஏன் என்றும் தெரியவில்லை
நீ...தந்த ..அன்றைய வசந்தம் மீண்டும் வராதா...
என்ற ஏக்கம் இதயத்தில்.
கனவுகள் எல்லாம் நிஜமாக்குவாயா..?
இல்லை நிழலாக்குவாயா...?என சிந்திக்கும் போது
கண்களில் சிந்துகின்றனகண்ணீர்த் துளிகள்.
எனை மறந்த நீ...எங்கோ...செல்லலாம்.
ஆனால் நான் உயிர் வாழ்வது கஸ்ரம்
ஏன் தெரியுமா..
நான் உன்னிடம் தந்தது என்உயிரை
அதை நீ..மறந்து சென்றாய்
இருந்தும். நான் என் உயிர் வரை சுமப்பேன்உன்னை மட்டும்.
p.ராகினி, germany
வாழ்வில் இன்பம் கொள்

வாழ்வில் இன்பம் கொள்
வாழ்க்கை ஓடும்போது
வரும் அனுபவமோ....ஏராளம்
அதில் வீழ்வதும் புறழுவதும் உயர்வதும்
அவன் அவனின் திறமையிலே...
உள்ளது என்பதை நீ...உணர்வாய்.
வாழ்வில்....நோக்கம் ஒன்றாக
வேண்டும்
ஆக்கம் அவசியம்
வேண்டும்
நம்பிக்கை சுடர் கொள்ள
வேண்டும்
நடந்து முடிந்ததை விட்டு விட்டு
நடப்பவை எதுவென சிந்திக்க
வேண்டும்
ஒவ்வொரு பொழுதுகளையும்
இனிமையாக்க வேண்டும்
துன்பம் வந்தாலும் துணிவுடன்
போராட வேண்டும்.
முதல்..நீ.... உன்னை நேசிக்க...
வேண்டும்
பின்....உன் குடும்பத்தை நேசிக்க....
வேண்டும்.
அதன் பின் உலகை நேசிக்க...
வேண்டும்.
வாழ்கை கோடை காலமாய்
வறண்டு விட்டதே..என
மனதை நொந்து நொந்து
சாகடிப்பதை விட
இருக்கும் வாழ்கையை
வசந்தமாக்க வேண்டும்
நம்பிக்கையை இழக்காது வாழ்வை
நகர்த்திச் செல்ல வேண்டும்
இருப்பதை இனிமையாக்கி..
இன்பமாக வாழும் போது...
அங்கே இன்பம் காண்பாய்.
- ராகினி, germany
எனக்கும் தெரியும்...

எனக்கும் தெரியும்...
உனக்குத் தெரியாதா...?
நான் உன்னை நேசிப்பதும்.....
என் வார்த்தைகளால்.. காதலிக்கின்றேன்
என்று சொல்ல விரும்பவில்லை
ஏன் தெரியுமா..?
என் கண்ணும் என் விழியும் சொல்லாததையா..?
என் உதடு சொல்லிவிடப் போகிறது உனக்கு?
என்னுடயது என்று நீ.. நினைத்தால்.
அது உன் தவறு
காதல் தொடக்கம் கடமைவரை
அது நம்முடையது என்று நினைத்து விடு.
இருவரும் காதலித்தபின்
நான் வேறுநீ..வேறா....?
இப்போ..என் தேவைகள்
எது தெரியுமா....?
தினமும் என் அருகில்
நீ..வேண்டும்
ஒவ்வொரு வினாடியும்
என்னோடு பேச வேண்டும்
அது...புலம்பலாக இருந்தாலும்
என் காதில் உன் குரல் வேண்டும்.
உன் குரலைக்கேட்டுக் கொண்டுதான்..
நான் உறங்குவேன் என்பதும் உனக்கு தெரிந்தும்
.தெரியாதது போல்...நீ..போடும் வேஷம்எனக்கும் தெரியும்.
நீ...என்னை நேசிக்கின்றாய்
ஆனால்....உன் மௌனம்தான் எது எனத் தெரியாமல்
. தினம்...தினம்..எனை வேதனையாக்குகிறது.
- ராகினி, germany
பணம்.
ஊனம்...

ஊனம்...
உன் கால் முடம் என்றால்
ஊன்று கோள் நான்...தருவேன்
உன் கை.. முடம் என்றால்
என்கையால் உனை தாங்குவேன்
நீ....ஊமையென்றால் நானும் மெனமாகிப்போவேன்
ஆனால் ...உன்பேச்சில் ஊனம் உள்ளதால்...
நான் ஊமையானேன் ...
- ராகினி, germany
----- ---- -----
தொடுப்புகள் [ LINKS ]
யாழ் கவி
தமிழ் மணம்
இலங்கை வானொலி நினைவலைகள்
நிலா எப்.எம்
Subscribe to:
Posts (Atom)